truetamilnews.com

அதிமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தலைமை ஒப்புதல் இல்லாமல் கட்சியினர் கருத்துகளை தெரிவிக்கக்கூடாது: ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கூட்டாக அறிக்கை

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது.

கடந்த சில நாட்களாக கழக நிர்வாகிகள் சிலர் எந்த பின்னணியும் இன்றி கூறிய சில கருத்துகள் மாற்றாருக்கு பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டன. அத்தகைய நிலை மீண்டும் ஏற்பட்டுவிடா வண்ணம் ஜெயலலிதா இருந்த காலத்தில் இருந்ததைப் போல ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்ட செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி, கழகத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னும்பிற ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கருத்து பரிமாற்றங்களை செய்வதன் மூலம் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை என்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks