truetamilnews.com

சென்னை: உலக நாயகன் தொகுத்து வழங்கவுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் பங்கேற்க பிரபல நடிகை ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கு டீலிங் பேசி உள்ளாராம்.

46 Best Shilpa Manjunath images | Tamil actress photos, Actresses, Actress  photos


பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட வருமானத்தை விஜய் டிவி ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் முதல் பங்கேற்கும் 15 போட்டியாளர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது.
அக்ரிமென்ட்டில் கையெழுத்துபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னதாக, அந்த நிகழ்ச்சி குறித்து வெளிப்படையாக வெளியில் பேசக் கூடாது. நிர்வாகம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உடன் பட வேண்டும். எப்போது வேண்டுமானாலும், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பப் படுவீர்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் தான் போட்டியாளர்கள் உள்ளே வருகின்றனர். அப்படி வருபவர்கள் தங்கள் மார்க்கெட்டுக்கு ஏற்றவாறு ஒரு நல்ல தொகையை சம்பளமாக பேசி பெறுவதும் வழக்கம்.


ஆட்டம் ஆரம்பம்

சமீபத்தில், பிக் பாஸ் தமிழ் சீசன் 4 முதல் புரொமோ வீடியோ வெளியிடப்பட்டது. எதிர்பார்த்தபடி, கமல்ஹாசன் தனது ஸ்டைலான தோற்றத்துடன் புரொமோவில் தோன்றினார். வரவிருக்கும் பிக் பாஸ் சீசன் 4-ல் போட்டியாளர்களாக 15 பேர் பங்கு பெற வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை ஒருவர் கேட்ட சம்பளம் பற்றி தான் பரபரப்பாக பேசப்படுகிறது.

விஜய் டிவி பிரபலங்கள்

pugal Instagram posts (photos and videos) - Picuki.com

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல இளம் நடிகைகளுக்கு அழைப்புகள் சென்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் சமீப காலமாக இருக்கும் நடிகர்களும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், புகழ், விஜே மணிமேகலை, மற்றும் ஷிவானி ஆகியோர் பெயர் அடிபட்டு வருகிறது.


கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது

Kiran Rathod movies, filmography, biography and songs - Cinestaan.com

சமீப காலமாக, ஹாட் போட்டோஸ் மூலம் சமூக வலைதளங்களை சூடேற்றி வரும் நடிகை கிரண், பிக்பாஸ் தமிழ் 4ல் போட்டியாளராக என்ட்ரி கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மும்தாஜ், நமீதா, ஷெரின் போன்ற சீனியர் நடிகைகள் இடம்பெற்றதை போல இந்த முறை கிரணின் பங்கேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் யார் யார் என்பது, பிக் பாஸ் சீசன் 4 ஆரம்பமாகும் நாளில் தான் தெரியவரும்.


தெறித்து ஓடிய நடிகை

Sunaina (Anusha) Photos [HD]: Latest Images, Pictures, Stills of Sunaina  (Anusha) - FilmiBeat

நடிகை சுனைனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், நான் கலந்துக்கல, எனக்கு முடிக்க வேண்டிய படங்கள் ஏராளமாக இருக்கு, பட வாய்ப்புகள் இல்லாத நடிகைகள் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்கிற ரீதியில் தெறித்து ஓடிவிட்டார். இதனால், அப்செட்டான பிக் பாஸ் குழு, ஹாட் ஹீரோயின் ஒருவரை புக் பண்ண முயற்சி செய்துள்ளது.

ஒரு கோடி டீலிங்

காளி, இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்களில் நாயகியாக வலம் வந்தவர் ஷில்பா மஞ்சுநாத். பார்ப்பதற்கே கவர்ச்சியாக இருக்கும் இந்த இளம் நடிகையை எப்படியாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வர விஜய் டிவி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அவரோ ரூ. 1 கோடி சம்பளம் கொடுத்தால் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறேன், இல்லை என்றால் வேறு ஆளை பாருங்கள் என்று கூறிவிட்டாராம். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் டீம் ஷில்பா மஞ்சுநாத்தை அணுகி ரூ.1 கோடி கொடுத்து அவரை அழைத்ததாகவும் ஷில்பாவும் அதற்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. காத்திருப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks