truetamilnews.com

வலது முழங்கையில் காயமடைந்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

வலது முழங்கை காயத்துக்காக அவர் ஊசிப் போட்டுக் கொண்டார். முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில் அவருக்கு வலது முழங்கையில் அசவுகரியம் ஏற்பட்டது.

“காயம் தீவிரமானது அல்ல. இப்போது அளிக்கப்பட்ட சிகிச்சை விரைவில் குணமடைந்து விடும், இதனையடுத்து அவர் அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்கு வந்து விடுவார்” என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவிக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆடாத ஸ்டூவர்ட் பிராட் சென்னையில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் அன்று சென்னை முதல் டெஸ்ட் போட்டியின் 5ம் நாள் அன்று இந்திய மிடில் ஆர்டர் முதுகெலும்பை தன் ரிவர்ஸ் ஸ்விங்கினால் உடைத்தார்.

ஒரே ஓவரில் ஷுப்மன் கில், ரஹானே ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தியதோடு ஃபார்மில் இருக்கும் ரிஷப் பந்த் விக்கெட்டையும் கைப்பற்றி நிலைகுலையச் செய்தார்.

இந்நிலையில் ஸ்டூவர்ட் பிராடும் ஆண்டர்சனுடன் சேர்வது இந்திய அணிக்கு கடும் சவால்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்ந்து அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியதில் பிராட், ஆண்டர்சன் முன்னிலை வகிக்கின்றனர்.

இதற்கிடையே முதல் டெஸ்ட் போட்டியின் சென்னை பிட்ச் குறித்து ஜோப்ரா ஆர்ச்சர் விமர்சனம் புரிந்தார்.

ஆரஞ்சு நிறத்தில் ஒரு பிட்சை உலகில் கண்டதில்லை என்றும் பிட்சைப் பார்த்தவுடனேயே இந்திய அணி காலி என்று நினைத்ததாகவும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நாளை தொடங்கும் சென்னை டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் குல்தீப் யாதவ் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாபாஸ் நதீம் இரண்டு டக்குகள் 233 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் என்று டெஸ்ட் தரத்துக்கு உயராத பவுலராக வெளியேறுகிறார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின், பும்ரா தவிர வேறு ஒருவரும் சரியாக வீசவில்லை.

2வது இன்னிங்சில் சுழற்பந்துக்கு சாதகமாக இருந்தும் வாஷிங்டன் சுந்தரை கோலி பயன்படுத்தவில்லை.

இந்நிலையில் சென்னை டெஸ்ட்டை வெல்ல கோலிக்கு கடும் நெருக்கடி இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks