truetamilnews.com

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. அதே போன்று தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், கேரளாவில் கரோனா பாதிப்புஅதிகப்படியாக இருந்து வந்தது. ஆரம்ப காலத்தில் குறைவான எண்ணிக்கையில் இருந்த கரோனா தொற்று, மிக வேகமாக அடுத்தடுத்த நாட்களில் உயர்ந்தது.

இந்த நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் தனியார் டியூசன் மையத்தில் படித்த 91 மாணவர்களுக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. மாரஞ்சேரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் அந்த மாணவர்கள் அனைவரும்,அருகில் உள்ள டியூசன் சென்டரில் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் டியூசன் ஆசிரியருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு படித்த 91 மாணவர்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks