truetamilnews.com

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது டி 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை அடித்தது. பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் 86 ரன்களும், ஹைதர் அலி 54 ரன்களும் அடித்தனர். 
இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்டுகளையும், டாம் குர்ரான் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

191 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இங்கிலந்து அணிக்கு வெற்றி பெற கடைசி 2 ஒவர்களில் 20 ரன்கள் தேவை என்ற போது வஹாப் ரியாஜ் பந்துவீச வந்தார். 19ஆவது ஒவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதனால் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியால் 11 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. 

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை சமன் செய்தது.  ஆம், மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனானது. 
இந்தப் போட்டியில் 86 ரன்கள் அடித்ததன் மூலம் ஆட்டநாயகன் விருது வென்றார் பாகிஸ்தான் அணி வீரர் முகமது ஹபீஸ். அதுமட்டுமல்ல தொடர் நாயகன் விருதையும் வென்றார். 


முன்னதாக இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றி இருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks