truetamilnews.com

 மறைந்த நடிகை வி.ஜே சித்ரா நடித்துள்ள கால்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியான சில நாட்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

சித்ரா மறைந்தாலும் அவரது புகழ் மறையாமல் இருக்கிறது.

சின்னத்திரை மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா.

மக்கள் தொலைக்காட்சியில் விஜேவாக பணியை தொடங்கி பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இறுதியாக பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் பிரபலமானார்.

நடிகை சித்ரா நடித்த முதல் திரைப்படமான கால்ஸ் படத்தின் டிரைலரை சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அப்படத்தில் நடிகை சித்ரா முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜெ.சபரிஷ் இயக்கியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகவுள்ளது. தமீம் அன்சாரி இசையமைத்திருக்கும் கால்ஸ் படத்தில் வினோதினி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரைலர் வெளியானது. வெளியான 5 நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனையை படைத்துள்ளது. மேலும் யூடியூபில் ட்ரெண்டிங்கிலும் உள்ளது. வானத்தில் சில ஆண்டுகள் நட்சத்திரமாக மின்னிய சித்ரா இப்படி திடீரென மறைந்து விட்டாலே என்று பல ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks