truetamilnews.com

தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், மானாவரி மற்றும் நீர்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கான இடு பொருள் நிவாரணம் 20 ஆயிரமாக அதிகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில்,
ஜனவரி மழையால் பாதிக்கப்பட்ட 6.56 லட்சம் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி என்று தெரிவித்துள்ளார்.

ரெண்டு ஹெக்டேருக்கு மட்டுமே இடுபொருள் நிவாரணம் என்ற உச்ச வரம்பைத் தளர்த்தி, உட்சவரம்பின்றி நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி என்று தெரிவித்துள்ளார்.

11 லட்சம் விவசாயிகளுக்கு ஜனவரி மாதம் மழை நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நிதி உதவியை எதிர் நோக்கி விவசாயிகளுக்கு 1116 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஹெக்டர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத்தொகை 13 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், மானாவாரி நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணமாக 10,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி என்று தெரிவித்துள்ளார்.

பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணம் ஒன்றுக்கு 18 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks