truetamilnews.com

சிறையில் இருந்து வரும் சசிகலாவை வரவேற்பதற்காக 33 ஆண்டுகள் டாக்டர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களோடு தவ வாழ்க்கை வாழ்ந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர், தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. கட்சிக்கட்டுப்பாட்டை மீறி போஸ்டர் ஒட்டியதாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அண்ணாதுரையை கட்சியில் இருந்து அதிமுக நீக்கியுள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,’கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதித்ததில் செயல்பட்ட காரணத்தினாலும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தநல்லூர் ஒன்றிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அண்ணாதுரை இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புடன் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks