truetamilnews.com

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார் என்று அவரின் மகன் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, தேசிய கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த மாதம் 19ம் தேதி முதல் அதிமுக திமுக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார் என்று அவரின் மகன் விஜய பிரபாகரன் அறிவித்துள்ளார்.

நேற்று திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜயபிரபாகரன் தெரிவித்ததாவது, “வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட பயப்படவில்லை. நாங்கள் எங்களுடைய தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார். நாங்கள் தற்போது அதிமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம்.

ஏற்கனவே தனித்து போட்டியிட்ட எங்களுக்கு தனித்து போட்டியிட பயமில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார்” என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks