truetamilnews.com

முக்கிய நிகழ்வுகள் :-

1756ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இசை வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற இசைமேதை மொஸார்ட், ஆஸ்திரியாவில் பிறந்தார்.

2009ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர் ரா.வெங்கட்ராமன் அவர்கள் மறைந்தார்.

1880ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.

முக்கிய தினம் :-

உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

உலக தொழுநோய் ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை (27.01.2019) கடைபிடிக்கப்படுகிறது.

தொழுநோய் குணப்படுத்தக்கூடிய நோய். ஆனால் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். தொழுநோயாளிகள் மீது அக்கறையும், கருணையும் ஏற்படவும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும்.

தொழுநோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஐ.நா. பொதுச்சபை இச்சட்டத்தை இயற்றியுள்ளது.

சர்வதேச படுகொலை நினைவு தினம்

இரண்டாம் உலக போரின்போது ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களுக்கு எதிராக ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இன ஒழிப்பு மற்றும் படுகொலையை நாஜிக்கள் செய்தனர்.

சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1945ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அன்று நாஜி மரண முகாமில் மீதமிருந்த யூதர்களை சோவியத் படைகள் விடுவித்தது.

இதுபோன்ற இனப்படுகொலைகள் மீண்டும் நடக்காமல் இருக்க ஐ.நா.அமைப்பு 2005ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தை கடைப்பிடிக்கிறது.

பிறந்த நாள் :-

சாமுவேல் கோம்பர்ஸ்

அமெரிக்காவின் முக்கிய தொழிற்சங்கத் தலைவரான சாமுவேல் கோம்பர்ஸ் 1850ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

குடும்ப வறுமை காரணமாக 10 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, சுருட்டு தயாரிப்பவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர், 1864-ல் நியூயார்க் நகர சுருட்டுத் தயாரிப்பாளர் சங்கத்தில் சேர்ந்தார்.

1881-ல் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழிலாளர் யூனியன்களின் கூட்டமைப்பை உருவாக்க உதவியாக இருந்தார். 1886-ல் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பாக (American Federation of Labor) இது மறு உருவாக்கம் செய்யப்பட்டு, அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கவும், அவர்களது வாழ்வாதாரம் மேம்படவும் பாடுபட்டார். 1919-ல் பாரீஸ் அமைதி மாநாட்டில் தொழிலாளர் பிரச்சனைகளுக்கான அதிகாரப்பூர்வ ஆலோசகராக கலந்துகொண்டார்.

சமூக மக்கள் அனைவருக்கும் இயற்கை வளங்களும், வாய்ப்புகளும் சமமானவை என்ற பொருளாதார தத்துவத்தைக் கொண்டிருந்த சாமுவேல் கோம்பர்ஸ் 74-வயதில் (1924) மறைந்தார்.

லூயிஸ் கரோல்

உலகப் புகழ்பெற்ற ‘ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட்’ குழந்தைகள் நாவலைப் படைத்த லூயிஸ் கரோல் 1832ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இங்கிலாந்தின் செ‘யர் பகுதியில் உள்ள டாரஸ்பரி கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சார்லஸ் லுட்விக் டாட்ஸன்.

இவர் ‘த்ரூ தி லுக்கிங் கிளாஸ் அண்ட் வாட் ஆலிஸ் ஃபவுண்ட் தேர்’ என்ற 2-வது பகுதியை எழுதினார். இவை இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான குழந்தைகள் நூல்களாகக் கொண்டாடப்பட்டன.

மேலும் இவர் கணிதப் பேராசிரியர், கவிஞர், புகைப்படக் கலைஞர் என்று பலவிதமாக அறியப்பட்டாலும் குழந்தைகளுக்கான எழுத்தாளர் என்று கூறப்படுவதையே அதிகம் விரும்பியவர்.

குழந்தைகள் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளியாகப் போற்றப்படும் லூயிஸ் கரோல் தனது 66-வது வயதில் (1898) மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks