truetamilnews.com

இந்திய விமானப்படையில் நிரப்பப்பட உள்ள ஏர்மேன் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத இந்திய ஆண் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Indian Air Force

பணி: Group ‘X’ (Except Education Instructor trade)

தகுதி: கணிதம், இயற்பியல், ஆங்கிலம் பாடங்களைக் கொண்ட பிரிவில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Group ‘Y’ [Except IAF(S) and Musician Trades]

தகுதி: ஏதாவதொரு பிரிவில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு ஆண்டு தொழிற்கல்வி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Group ‘Y’ Medical Assistant Trade Only.

தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் போன்ற பாடங்கள் அடங்கிய பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

பணி: Airmen (Group ”X”/ Group ”Y”)

தகுதி: கணிதம், இயற்பியல், ஆங்கிலம் பாடங்களைக் கொண்ட பிரிவில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

உடற்தகுதி: உயரம் 152.5 செ.மீட்டர், 5 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மையும் குறைந்தபட்சம் 55 கிலோ உடல் எடை பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி: 6.5 நிமிடத்தில் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை ஓடி முடிக்க வேண்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 10 Push-ups, 10 sit-ups, 20 squats எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: 

பயிற்சியின்போது மாதம் ரூ.14,600 வழங்கப்படும். பயிற்சிக்கு பின்னர் அரசு விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விமானப்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.airmenselection.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.02.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_18_2021b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks