truetamilnews.com

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், அவரின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதால், அவருக்கு உண்டான சிகிச்சையை பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர்.

சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் பத்து நாட்களுக்கு மேல் தனிமைப் படுத்தப் படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் வரும் 27ம் தேதி விடுதலை ஆவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசிக்கும் கோரனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர் டி பி சி ஆர் பரிசோதனையில் இளவரசிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் இளவரசிக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks