truetamilnews.com

சண்டிகர்: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளில், உயிர் இழந்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அமல்படுத்திய, மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர், டில்லியில், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டில்லியில் நிலவி வரும் கடுங்குளிரில் சிக்கி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பலர் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks