truetamilnews.com

கோவைக்கு இன்று(ஜன.,23) வரும் முதல்வர் பழனிசாமி, மூன்று முக்கிய திட்டங்களை அறிவிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, முதல்வர் பழனிசாமி, கோவைக்கு இன்று வருகிறார். கோவையில் பிரசாரத்தை துவங்கும் அவர், புதிய சில திட்டங்களையும் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கோவை மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகவுள்ள மெட்ரோ ரயில் திட்டம், தொழில்துறையினர் கோரிக்கை வைத்துள்ள புதிய விமான நிலையம், மத்திய சிறை இடமாற்றம் ஆகிய திட்டங்களை அவர் அறிவிப்பதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் பரவியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks