truetamilnews.com

யானையின் காதில் தீவைத்து, அதனால் இறக்க காரணமாக இருந்த இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் ., சிங்காரா வனப்பகுதியில், முதுகில் ஏற்பட்ட காயம் மற்றும் சமீபத்தில் சமூக விரோதிகளால் காதில் ஏற்படுத்தப்பட்ட தீ காயத்துடன் 40 வயது காட்டு யானை சிரமப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சைக்காக, 19 ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். லாரியில் ஏற்றி தெப்பக்காடு யானைகள் முகாம், செல்லும் வழியில் யானை உயிரிழந்தது.அதன் முதுகில் ஏற்பட்ட காயம், நுரையீரல் வரை சென்று பாதிப்பை ஏற்படுத்தி, அதன் காரணமாக உடல் பலவீனமடைந்து இறந்துள்ளது’ என, தெரிவித்தனர்.

அதன் காதில் தீக்காயம் ஏற்படுத்தியவர்கள் குறித்து, விசாரித்து வந்த வனத்துறையினர், இன்று இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவனது பெயர் பிரசாத்(36) என்பதும், மற்றொருவனது பெயர் ரேமண்ட்(38) எனவும் தெரியவந்துள்ளது. மற்றொருவரின் விபரம் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நிக்கி ராயன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

இதனிடையே, குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்டு யானையை விரட்டுவதற்காக, சில தீப்பந்தத்தை அதன் காதில் வீசியதும், கழுத்து பகுதியில் எரியும் தீயுடன் யானை அலறிக் கொண்டு ஓடுவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாவநல்லா பகுதியில் காட்டு யானைக்கு தீ வைத்ததாக ரைமன்உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்நடத்தி வந்த விடுதி உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனயடுத்து விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks