truetamilnews.com

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக சுமார் 68 ஆண்டுகாலம் பணியாற்றியவர் டாக்டர் வி.சாந்தா. புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு இலவசமாகவும், குறைந்த செலவிலும் அடையாறு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தார். ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர்

அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் டாக்டராக தனது பணியை தொடங்கினார். 12 படுக்கைகளுடன் இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை தனது குருவாக போற்றும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து உலகத் தரம்வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் இவர் பெரும் பங்காற்றினார்.

டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் விட்டுச்சென்ற பணியை திறம்பட செய்தவர். ஏழை மக்களுக்கு சேவை செய்த மனித நேயம் மிக்க மருத்துவராக திகழ்ந்தவர். அவருடைய மறைவு இன்றைக்கு பலரது கண்களை குளமாக்கியுள்ளது.

68 ஆண்டுகளுக்கும் மேலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றிய சாந்தா, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியில் இந்திய அளவில் முன்னோடியாக திகழ்ந்தார். டாக்டர் சாந்தா தனது இறுதி காலம் வரை புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நவீன சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.

டாக்டர் சாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நேரம் வரை பணியாற்றிக் கொண்டிருந்தார் என அவருடன் பணிபுரிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மறைந்த டாக்டர் சாந்தாவின் உடல் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கண்ணீர் மல்க பங்கேற்றனர்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks