truetamilnews.com

தெலுங்கானாவின் ஐதராபாதைச் சேர்ந்த, ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள, நாட்டின் முதல் தனியார் நிறுவன ராக்கெட், இந்த ஆண்டு இறுதியில் விண்ணில் ஏவப்பட உள்ளது.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி நடக்கிறது.

தலைநகர் ஐதராபாதில், ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.’இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் விஞ்ஞானிகள், பவன்குமார் சந்தானா மற்றும் நாகா பாரத் தாகா ஆகியோர், இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.’ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு வழங்கப்படும், தேசிய அளவிலான விருது, சமீபத்தில் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அப்போது, இதன் நிறுவனர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக உரையாடினார்.

இந்நிறுவனம், வர்த்தக பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் சிறிய ரக ராக்கெட்டுகளை உருவாக்கி வருகிறது. இவர்கள் தயாரித்துள்ள, ‘விக்ரம் – ஐ’ என்ற முதல் ராக்கெட், இந்த ஆண்டு டிசம்பரில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks