truetamilnews.com

ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரர் சி-வாய். அவருக்கு வயது 37. பத்து ஆண்டுகளுக்கு முன்னர், கார் விபத்தில் பெரும் விபத்து ஏற்பட்டு அவருடைய கீழ் உடம்பு செயலற்றுப் போனது. பத்து ஆண்டுகளாக வீல் சேரின் உதவியுடன்தான் தன் வாழ்நாளைக் கழித்துவருகிறார். அந்த கார் விபத்து அவருடைய நடையைத்தான் முடக்கியதே தவிர, வாழ்க்கையை அல்ல. இத்தனை துயரங்களுக்குப் பிறகு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கோவ்லூன் பெனிசுலாவிலுள்ள 300 அடி உயர நினா டவரில் வீல் சேரில் அமர்ந்துகொண்டே ஏறி சாதனை படைத்துள்ளார். 300 அடி உயர கட்டிடத்தில் ஏறுவதற்கு பத்து மணி நேரம் தேவைப்பட்டுள்ளது.

இதன்மூலம், சுமார் 4.90 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளார். இந்தநிதியை முதுகுத் தண்டு பாதிப்பால் வாழ்க்கைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவுள்ளார். இதுகுறித்து தெரிவித்த சி-வாய், ‘நான் கொஞ்சம் பயந்தேன். மலையில் ஏறும்போது நான் சிறிய பாறைகளையோ சிறிய சிறிய ஓட்டைகளையோ பிடித்துக் கொள்வேன். ஆனால், கண்ணாடியில் ஏறுவது கடினம். மலையேற்ற பயிற்சியில் லாய் நான்கு முறை ஆசிய சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks