truetamilnews.com

 
பாட்டில் பாட்டிலாக பலர் ஷாம்பு வகைகளை வாங்கிவவைத்திருக்கிறீர்கள்.  ஆனால் அதை எந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும்? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும் என்பது தெரிவதில்லை. அதற்கான விடை தான் இந்த பதிவு தவறாமல் படியுங்கள்

உணவு

 கூந்தல் அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஷாம்பு மட்டும் பயன்படுத்தக் கூடாது. சமச்சீரான சத்துணவுகளையும் சாப்பிட வேண்டும்.  முட்டை, ஈரல், காளான், காலிப்ஃபிளவர், பயறு, சோயா பீன்ஸ், கோதுமை ரொட்டி, நேந்திரம்பழம், பருப்புவகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.  மன அமைதியோடு 8 மணி நேரம் தினமும் தூங்க வேண்டும்.

 தினமும் செய்ய வேண்டியவை

எண்ணெய் தன்மை கொண்ட கூந்தலை உடையவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள்,  தூசு நிறைந்த இடத்தில் வேலை பார்ப்பவர்கள் தினமும் ஷாம்பு கொண்டு கூந்தலை சுத்தம் செய்யலாம். ஹேர் ஸ்பிரே, ஹேர் ஜெல் பயன்படுத்துபவர்கள் கூட தினமும் ஷாம்பு பயன்படுத்தலாம்.

பாதிப்பு எதுவும் இல்லாத கூந்தலை கொண்டவர்கள், முடி துண்டு துண்டாக உடையும் தன்மை வாய்ந்த கூந்தலை உடையவர்கள் தினமும் ஷாம்பு பயன்படுத்த தேவையில்லை. முடியில் கலரிங் செய்திருப்பவர்களும் முடியை சுருட்டி வைத்திருப்பவர்களும் ஷாம்பு பயன்படுத்த தேவையில்லை

சரியான தேர்வு

ஒவ்வொரு நபரும் அவரவர் தலைமுடியின் தன்மையை அறிந்து ஷாம்புவை தேர்ந்தெடுக்க வேண்டும். கெட்டியான முடியை கொண்டவர்கள் மோய்ச ரைசர் சேர்ந்த ஷாம்புவை பயன்படுத்தலாம். எண்ணெய் தன்மை கொண்ட கூந்தல் என்றால் கிரீம் அடங்கிய ஷாம்புவை பயன்படுத்த கூடாது. வீரியம் குறைந்த ஸபிரே கண்டிஸ்னர் ஷாம்பு அவர்களுக்கு சிறந்தது. வறண்ட ஆரோக்கியமான கூந்தலை கொண்டவர்கள் அல்ட்ரா மோய்ஸ் ரைசர் கொண்ட ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். இவர்கள் இடைவெளிவிட்டு கண்டிஸ்னர் பயன்படுத்தினால் கூந்தல் ஜொலிக்கும்.

 பயன்படுத்தும் முறை

முடியை தண்ணீரில் நினைத்த பின்பே ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். எவ்வளவு அளவு ஷாம்பு பயன்படுத்த வேண்டும் என்பது அவரவர் கூந்தலின் நீளம் மற்றும் அடர்த்தியை பொறுத்து மாறும். ஷாம்புவை தலையில் தேய்ப்பதற்கு உள்ளங்கை மற்றும் நகங்களை பயன்படுத்தக்கூடாது. விரல் நுனியால் மென்மையாக மசாஜ் செய்து மெல்ல கூந்தலோடு பற்றிப் பிடிக்க செய்ய வேண்டும். தலையின் குறிப்பிட்ட பகுதியில் எப்பொழுதும் ஷாம்புவை தேய்த்தால் அந்த பகுதி வறண்டுவிடும். அந்த இடத்தில் முடி அதிகமாக  உதிரவும் ஆரம்பிக்கும்.   கழுத்தின் கீழ் பகுதியிலிருந்து மேல் நோக்கி ஷாம்புவை தேய்ப்பது சரியான முறையாகும்.

நேரம்

பொதுவாக தலையில் ஷாம்பு ஒன்றரை நிமிடம் இருந்தால் போதுமானது.   அழகு சிகிச்சை செய்பவர்கள் குறிப்பிட்டு சொன்னால் மட்டுமே ஷாம்பு பயன்பாட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டும். ஒரு குளிக்கும் போது ஒரு தடவைக்கு மேல் ஷாம்பு பயன்படுத்த கூடாது. குளிக்கும் போது தலையை நன்றாக அலசி ஷாம்புவின் தன்மையை நீக்கிவிட வேண்டும். கண்டிஸ்னர் ஷாம்பு போடுவதால் வறண்ட தன்மை கொண்ட கூந்தலுக்கு ஈரத்தன்மை மற்றும் ஜொலி ஜொலிப்பை கூந்தல் பெறுகிறது.  பொடுகு பிரச்சினை உள்ளவர்கள் பேபி ஷாம்பு அல்லது மெடிகேட்டட் ஷாம்புவை பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks