truetamilnews.com

நெல்லை மாவட்டம் வடலிவிளை கிராமத்தில் நடைபெற்ற இளவட்டகல் தூக்கும் போட்டியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இளவட்டகல், உரல் உள்ளிட்டவற்றை தூக்கி அசத்தினர்.இதில் கிராம இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இளவட்டகல், உரல் தூக்கும் போட்டிகள் நடைபெற்றன. இளைஞர்களுக்கு 90 கிலோ எடைகொண்ட இளவட்டகல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் முத்துப்பாண்டி என்பவர் இளவட்டகல்லை தூக்கி 12 முறை சுற்றி முதல் பரிசை தட்டிச்சென்றார்.

இதேபோல் பெண்களுக்கு 60 கிலோ எடைகொண்ட இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது, இதில் பத்மா முதல் பரிசையும், ராஜகுமாரி இரண்டாவது பரிசையும் தட்டிச்சென்றனர்.குழந்தைகளுக்கும் 40 கிலோ உரல் தூக்கும் போட்டி நடைபெற்றது இதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks