truetamilnews.com

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள பபச்சார்பாளையத்தை சேர்ந்தவர் ப வெ தாமோதரன். இவர் ஜெயலலிதா அமைச்சரவையில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக இருந்துள்ளார்.

அதிமுகவின் முன்னாள் கோவை புறநகர் மாவட்ட செயலாளர், எம்ஜிஆர் மன்ற முன்னாள் மாநில துணை தலைவர், ஆவின் முன்னாள் தலைவர் ஆகிய பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். கடந்த டிசம்பர் 15ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாமோதரன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதை அடுத்து நுரையீரலிலும் 90% பாதிப்புகள் இருந்ததாகவும் மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கொரோனா நோய்த்தொற்றின் தீவிரவாதிகளும், நுரையீரல் பாதிப்பாலும் முன்னாள் அமைச்சர் தாமோதரன் நேற்று மாலை உயிரிழந்தார். தற்போது இவரது மறைவிற்கு அதிமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், தாமோதரன் மறைந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தோம். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் இறைவனை பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks