Truetamilnews.com


இந்த ஓராண்டு இலவச பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற இளைஞர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 


நகராட்சி கமிஷனர் காந்திராஜ் அறிக்கையில், பொள்ளாச்சி நகரப்பகுதிகளில் பாதாளச் சாக்கடை பணிகள், சாலை மற்றும் கட்டிட பணிகள் மற்றும் நகர் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை கற்று அனுபவம் பெற சிவில் இளங்கலையில் பொறியியல் பட்டம் பெற்ற 3 பட்டதாரிகள் கணினி அறிவியலில் பற்றம் பெற்ற 2 பட்டதாரிகள் டிப்ளமோவில் பட்டயம் பெற்ற 5 பட்டதாரிகள் படித்து முடித்து பத்து மாதங்தளுக்கு மிகாமல் இருக்கும் 10 பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி கலந்து கொள்ளும் நபர்களுக்கு  ஊதியமோ உதவித்தொகையோ கிடையாது. பயிற்சி முடிந்த பின்பு பயிற்சி நிறைவுச் சான்றிதல் வழங்கப்படும். இந்த பயிற்சி நிறைவுச் சான்றிதல் வேலை வாய்ப்புகளுக்கோ அல்லது நகராட்சியில் பணியில் சேர்வதற்கான உத்திரவாதமாக கருதப்படக்கூடாது. பயிற்சியில் சேர விரும்புவர்கள் நேரிலோ அல்லது www.internship-article.india.org என்னும் இணையதளத்தில் பதிவு செய்து அதன் விவரத்தை நகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்.  மேலும் விபரங்களுக்கு நகராட்சி அலுவலகம் பொறியியல் பிரிவில் அலுவலக நேரத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks