truetamilnews.com

அதிமுக மீது திமுகவினர் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். சமீபத்தில் ஆ ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழல் குற்றச்சாட்டு குறித்து என்னுடன் விவாதிக்க தயாரா என சவால் விட்டார். அதற்கு முதலமைச்சர் ஆ ராசா எல்லாம் ஒரு ஆளா, அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லனுமா என கூறினார். இதையடுத்து, திமுக தலைவர் மு க ஸ்டாலினும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா.? என முதலமைச்சருக்கு சவால் விட்டு வருகிறார்.

இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் பாஜக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் திமுகவினர் முதலமைச்சரை விவாதத்திற்கு அழைப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், மத்திய அரசின் கொள்கை மற்றும் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு பலமுறை அழைப்பு விடுத்தும், இதுவரைக்கும் அவருக்கு வரவில்லை. அதிலிருந்து தெரிகிறது திமுக வெறும் வாய்ச்சவடால்தான். முதலமைச்சருக்கு சவால் விடுவதிலும் திமுக வெறும் வாய்ச்சவடால் தான் காட்டுகிறது. மேலும், அதிமுக பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் எங்களுடன் நெருக்கமாக உள்ளனர் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks