truetamilnews.com

 
பொள்ளாச்சி விவசாய மக்கள் அவர்கள் பயிரிடும் மக்காச்சோளம், பருத்தி இன்னும் சில பயிர்களுக்கு காப்பீடு செய்ய செப்டம்பர் 15 கடைசி நாள் என வேளான் துறையினர் தகவல்
இயற்கை சீற்றம், நோய் பூச்சிகள் மூலமாக தங்கள் பயிர்களுக்கும் தங்களுக்கும் ஏற்படும் எதிர்பாராத விபத்துக்களில் இருந்து காத்துக்கொள்ள பிரதம மந்திரியின் பயிர்காப்பீடு திட்டம் செயல்படுகிறது.  நடப்பு காலத்தில் பயிர் காப்பீடு செய்ய பயிர்களின் வகைகள் வாரியாக பிரிக்கப்பட்டு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது பொள்ளாச்சி வடக்கு, தெற்கு,  ஆனைமலை வட்டார விவசாயிகள் சோளம் மக்காச்சோளம் பருத்தி விவசாயிகளுக்கு ப்ரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்ய செப்டம்பர் 15 கடைசி நாள் என வேளான் துறையினர் தகவல் தந்துள்ளனர் 
இது குறித்து வேளாண்மை துறை இணை இயக்குனர் சித்ரா தேவி கூறியதுபயிர் காப்பீடு செய்ய சோளத்திற்கு 209 ரூபாயும் மக்காச்சோளத்திற்கு 588 ரூபாயும்  பருத்திக்கு 450 ரூபாயும் ஏக்கருக்கு ப்ரீமியம் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சோளத்திற்கு 10648 ரூபாயும் மக்காச்சோளத்திற்கு 29388 ரூபாயும் பருத்திக்கு 9189 ரூபாயும் இழப்பீடு கிடைக்கும். பயிர் காப்பீடு செய்ய செப்டம்பர் 15 கடைசி நாள்.  அதற்குள்  தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் வங்கிகள் ஆகியவற்றில் விவசாயிகள் ப்ரீமியம் தொகையை செலுத்தலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks