truetamilnews.com

பெரியகுளம்: ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு பணியில் இருந்த போது தீ விபத்தில் வீரமரணமடைந்த தேனி ராணுவ வீரரின் உடல் இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் ஆறுமுகம் (38). இவர் 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். அண்மையில் ஜம்மு காஷ்மீரில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நாயக்காக பணிபுரிந்து வந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆறுமுகம் தீவிபத்தில் படுகாயமடைந்தார். அவரை ராணுவ மருத்துவமனையில் அனுமதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். விமானம் மூலம் அவரது உடல் வடுகபட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. வீரமரணமடைந்த ஆறுமுகத்திற்கு மனைவி பாண்டிராணி (32), 7 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks