truetamilnews.com

வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை மாற்றி அமைத்துள்ளது வாட்ஸ்அப். பயனாளிகளின் டேட்டா தகவல்கள் இனிமேல் ஃபேஸ்புக்குக்கு ஷேர் செய்யப்படும்.

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் வாட்ஸ் அப்பை வாங்கியது. இதன் பிறகு வாட்ஸ்அப்பில் பல்வேறு சேவைகள் புதிதாக கொண்டுவரப்படுகின்றன. வாட்ஸ்அப் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷன் மெசேஜ் வருகிறது. வாட்ஸ் அப் செயலியை திறந்ததுமே அந்த மெசேஜ் உங்கள் கண்ணில் படும்.

இதில், “WhatApp is updating its terms and privacy policy,” என்ற வரிகள் இடம் பெற்றிருக்கும். நீங்கள் பின்னர் ஓகேதைச் செய்கிறேன் என்று கூறியிருந்தாலும் பிப்ரவரி மாதம் 8ம் தேதிக்குள் இதை நீங்கள் செய்தாக வேண்டும். அவ்வாறு ஓகே கொடுக்காவிட்டால் உங்களால் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.

அப்படி என்ன விஷயம் இதில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்களை ஷேர் செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டுதான் இதுபோல ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது அந்த நிறுவனம். ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அனுப்பப்படும் மெசேஜ்கள் பாதுகாப்பானவை. பிறரால் படிக்க முடியாத encrypted செய்யப்பட்டவை என்பது தான் வாட்ஸ் அப் செயலியில் தனித்துவமாக இருந்தது. ஆனால் இதில் சமரசம் செய்து கொண்டு உள்ளது அந்த நிறுவனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks