truetamilnews.com

தோனி ஓய்வு எப்பொழுது என்ற விவாதம் தினம் தினம் நடைபெற்று கொண்டே இருந்த நிலையில், தோனியோ ஏறத்தாழ ஒரு வருட காலம் மொளனமாகவே இருந்து வந்தார். இதனால் தோனி டி.20 உலகக்கோப்பை வரை விளையாடுவார் என எதிபார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஆகஸ்ட் 15ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் மிக எளிமையான முறையில் அறிவித்து அனைவருக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியளித்தார். தோனியின் ஓய்வு அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் தோனியின் பாதையை பின்பற்றி ஓய்வை அறிவித்தார்.

தல தோனியும், சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் தங்களது ஓய்வை அறிவித்து ஏறத்தாழ ஒரு வாரமே நிறைவடைந்து விட்டாலும், இன்னமும் அவர்கள் ஓய்வு முடிவு குறித்தான கருத்துகளும், கவலைகளும் ஓய்ந்த பாடில்லை.

இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ளார்.  ஆர் பி சி சிங் கூறியதாவது..

2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தோனி நான்காமிடத்தில் ஆட வேண்டும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அணி நிர்வாகம் அவரை கடைசியில் இறக்கிவிட்டது. பல போட்டிகளில் அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. மேலும் சில போட்டிகளில் அவர் எப்போதும் போல் போட்டியை முடித்து வைக்க முடியவில்லை .

இளம்வயதில் அவர் ஆடியதை போல ஆட முடியவில்லை. இது அவருக்கு ஒரு சிறிய சமிக்கையை கொடுத்திருக்கும். நாம் கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவை நெருங்கிவிட்டோம் என்று அதனால்தான் அவர் போய் இதனை அறிவித்திருக்கிறார் என்று கூறியுள்ளார் ஆர் பி சிங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks