truetamilnews.com

புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை சென்னை, கடலூர், விழுப்புரம், திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையை உறுதி செய்யும் வகையில் சென்னையில் நள்ளிரவில் கன மழை பெய்து வருகிறது. பெங்களூரிலும் பகலில் ஆரம்பித்து, இரவு வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இரவில், அடுத்த 4 மணி நேரத்திற்கு தீவிர மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்திருந்தாலும், பருவமழை அடுத்த வாரம் வரை தொடரும் என்று ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks