truetamilnews.com

10 வருடம் ஆட்சியை பிடிக்க போராடி வரும், திமுக தலைவர் முக. ஸ்டாலின், இதை மட்டும் செய்தால் போதும், அவர்தான் அடுத்த முதல்வர் என்ற ஆதரவு குரல்கள் எழ தொடங்கி உள்ளன…! திமுகவை பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெற, கன கச்சிதமாக காய்களை நகர்த்தி வருகிறது.. மாஸ் வெற்றியுடன் ஆட்சியை பிடிப்பதுடன், பாஜகவுக்கு ஒரு செக் வைக்க வேண்டும் என்ற முனைப்பும் உள்ளது. அதனால், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இந்த தேர்தல் மிக மிக முக்கியமானது… ஆனால், அதிமுக மெகா கூட்டணி தொடர்வது, பாஜக தொடர்ந்து நெருக்கடி தருவது, சீமான் ஒரு பக்கம், கமல் ஒரு பக்கம் களம் இறங்குவது, புகையும் உட்கட்சி பூசல், நெருக்கும் கூட்டணி கட்சிகள் என பல்வேறு பிரச்சனைகளில் திமுக சிக்கி விழித்து வருகிறது.

இதையெல்லாம் சமாளித்துதான் திமுக வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது… அதனால்தான் 200 தொகுதிகளிலாவது போட்டியிட்டு, மெஜாரிட்டியை கையில் வைத்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. கூட்டணி கட்சிகளும் இதற்கு ஒத்துழைப்பு தந்தால், அனைத்துமே சுமூகமாக முடியும் என்பது திமுக தலைமையின் கணக்கு.

ஆனால் கூட்டணி கட்சிகளின் கணக்கோ வேறு மாதிரியாக உள்ளது… தங்களுக்கு தனிச்சின்னம் வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.. தற்போது விவாதமே இதை வைத்து தான் எழுந்துள்ளது.. கூட்டணி கட்சிகளுக்கு தனிச்சின்னம் ஒதுக்கீடுவதா? அல்லது உதயசூரியன் சின்னத்திலேயே அவைகளை போட்டியிட வைக்க வேண்டுமா என்பதுதான்! இதுகுறித்து சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:

அதேசமயம் மாற்று கருத்தையும் சிலர் முன்வைக்கிறார்கள்.. “கூட்டணிகளுக்கு இரட்டை இலக்க சீட்டுகளை ஒதுக்கிவிட்டால், திமுகவுக்கு கடந்த முறை மாதிரி சிக்கல் வந்துவிடும்.. திடீரென புதுச்சின்னதை ஒதுக்கினால் அதை குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது.. விசிகவுக்கு பானை சின்னம் அப்படித்தான் அமைந்துவிட்டது.. அதனால் ரிஸ்க் எடுக்காமல் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்கலாம்.. இவ்வளவு நாளும் அப்படித்தானே போட்டியிட்டு வந்தனர்.. இப்போது மட்டும் ஏன் போர்க்கொடி தூக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks