truetamilnews.com

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராமசபை கூட்டத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க. தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்டு இருந்தபோது கூட்டம் நடந்த இடத்தில் உள்ள புளியமரத்தின் அருகே சிறிய பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. இதை பார்த்தவுடன் கூட்டத்தில் அமர்ந்து இருந்த பெண்கள் பதறியடித்தபடி எழுந்து அந்த இடத்தை விட்டு சற்று தள்ளி நின்றனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

உடனே தி.மு.க. நிர்வாகிகள் ஓடி வந்து மு.க.ஸ்டாலின் அருகே நின்று கொண்டதுடன், அந்த பாம்பை அடித்து அருகே உள்ள குளத்தின் கரையில் தூக்கி வீசினர். அந்த பாம்பு அருகில் இருந்த குளத்தில் இருந்து வந்ததா? அல்லது மரத்தில் இருந்து விழுந்ததா? என உடனடியாக தெரியவில்லை.

மக்கள் கிராமசபை கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்த திட்டமிட்டு யாராவது துணிப்பையில் பாம்பை கொண்டு வந்து போட்டுவிட்டு சென்று இருக்கலாமோ? என தி.மு.க. நிர்வாகிகள் சந்தேகப்படுகின்றனர். இருந்தாலும் எந்தவித பிரச்சினையும் இன்றி கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks