truetamilnews.com


மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலுக்கு பல மாதங்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இது தொடர்பாக நடிகர் விஜய் அவர்கள் முதல்வரை சந்தித்தபோது 100 சதவீதம் பார்வையாளர்களுடன் திரைப்படத்தை பார்ப்பதற்கு திரையரங்குகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டிருந்தார். முதல்வர் அவர்களும் நடிகர் விஜய் அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக கூறினார். 

இதற்கிடையில் சற்றுமுன் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதில் “திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே 50 சதவீதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளித்த நிலையில் இப்பொழுது 100 சதவீதம் பார்வையாளர்களுடன் படங்களை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தி விஜய் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks