truetamilnews.com

தமிழக அரசு வருடம் தவறாமல் பொங்கல் பரிசு தந்து வருகிறது. அந்த வகையில் சென்ற வருடம் பொங்கல் பரிசாக 1000 ரூபாயும் மற்றும் பொங்கல் செய்வதற்கு அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை ஆகிய அனைத்தும் மற்றும் கரும்பு சிறு துண்டும் பொங்கல் பரிசாக தமிழக அரசால் வழங்கப்பட்டது. 

அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் பரிசாக தமிழக அரசு சென்ற வருடத்தைவிட 1500 ரூபாய் அதிகமாக சேர்த்து மொத்தம் 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தது. 

அத்தகைய வகையில் பொங்கல் பரிசு வாங்குவதற்கு தேவையான டோக்கன்கள் தமிழ்நாடு முழுவதும் நியாயவிலை கடை ஊழியர்களால் வழங்கப்பட்டது. 

இன்று முதல் அந்த பொங்கல் பரிசு நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
இந்த பொங்கல் பரிசில் ரூபாய் 2500 பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது 

மக்களே முகத்திற்கு கட்டாயமாக மாஸ்க் அணிந்து கொண்டு பொங்கல் பரிசு வாங்க செல்லுங்கள். தனி மனித இடைவெளியை கடைபிடியுங்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks