truetamilnews.com

இரஷ்ய நாட்டு வீரர்களே சதுரங்க விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் இந்தியாவின் கொடியுயர்த்தி தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்த மற்றுமொரு தமிழகத்தின் கிராண்ட் மாஸ்டர்.  

இவர் யாரும் இல்லை ஈரோட்டை சேர்ந்த 16 வயது நிரம்பிய மாணவன்  இனியன்  பன்னீர்செல்வம்.

இவர் ஈரோட்டில் இடையான் காட்டுவலசு என்னும் கிராமத்திலிருந்து 5 வயதிலிருந்தே தன் கனவை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொண்டு 16 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். 

சிறிய கிராமத்திலிருந்து கிளம்பி உலகையே வசப்படுத்திய இந்த மாணவன் சதுரங்க போட்டியில் பட்டம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். 

இனியன் பன்னீர்செல்வம் அவர்கள் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க உலக ஒபன் செஸ் போட்டியில் முதலிடம் பிடித்த முதல் தமிழர் மற்றும் முதல் இந்தியர் என்னும் பெருமையை பெற்றுள்ளார். 

இவரின் சாதனை மிக பெரிய ஒன்றாக உள்ளது. 280 போட்டிகள் மற்றும் 150 மெடல்கள் என மிக பெரியது. 

சதுரங்க போட்டியின் முன்னோடி விஸ்வநாதன் ஆனந்த் அவர்களால் நம்பிக்கை அளிக்கும் தம்பி என வாழ்த்துகள் பெற்றவர் இனியன் பன்னீர்செல்வம் அவர்கள் ஆவார். அந்த வாழ்த்து இனியன் பன்னீர்செல்வம் அவர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி

210 நாடுகள் மற்றும் 271 வீரர்களுடன் விளையாடி கிடைத்த பணத்தை அரசின் கொரோனா நிதிக்கு கொடுத்ததற்கு  பாராட்டுகள்
இவரை பெருமை சேர்க்கும் விதமாக விகடன் இதழ் விருது வழங்கி கௌரவித்து உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks