truetamilnews.com

முழுமுதற் கடவுள் விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது வழக்கம். அப்போது விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடுவது உண்டு. 

அந்த வகையில் பாகுபலி விநாயகர், போலிஸ் விநாயகர் என பல விதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. சென்ற வருடம் 2020ல் கொரோனா வைரஸை மையமாக வைத்து கொரோனாவை அழிப்பது போலவும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது போல டாக்டர் வடிவங்களிலும் சிலைகள் வடிவமைக்கப்பட்டது. 


ஆனால் முகநூலில் வரைபட கலைஞர் ஒருவர் விநாயகருக்கு புது வடிவம் கொடுத்து வரைந்துள்ளார். இந்த வரைபட கலைஞர் விநாயகரை திருவள்ளுவர் போல சித்தரித்து வரைந்துள்ளார்.

திருவள்ளுவர் குறள் எழுதுவது போல விநாயகர் குறள் எழுதுவது போன்று வரைந்துள்ளார். திருவள்ளுவ விநாயகர் என்று கூறினால் பொருந்தும் என பலரும் கருத்து தெரிவித்து இருக்கின்றார்.

ஏற்கனவே திருவள்ளுவர்க்கு காவி உடை பூட்டி வெளிவந்த பாடப்புத்தக படங்களால் பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்நிலையில் விநாயகர் திருவள்ளுவர் படம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks