truetamilnews.com

இந்தியாவில் சுமார் ஐந்து மாத காலமாக எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரின் 13வது சீசன் துவங்க உள்ளது. இதற்காக இந்தியாவிலிருந்து பல வீரர்கள் ஏற்கனவே துபாய் சென்று விட்டனர். இன்னும் சில வெளிநாட்டு வீரர்கள் அவர்களின் நாடுகளில் இருந்து நேரடியாக துபாய் மற்றும் அபுதாபி வந்தடைவர்.

முதல்கட்டமாக வீரர்களுக்கு ஏழு நாட்கள் உயர்தர ஹோட்டலில் தனிமைப்படுத்தல் நிலவி வந்தது. அதன்பிறகு மற்ற வீரர்கள் தங்களது பயிற்சியை துவங்கிவிட்டனர். சென்னை அணியில் இரண்டு வீரர்கள் உட்பட பதிமூன்று பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் சிஎஸ்கே வீரர்களுக்கு மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படல் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நெருக்கடியில் இருக்கும் சென்னை அணிக்கு மற்றுமொரு பெருத்த பின்னடைவாக நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்

இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவிற்கு கரோனா இருக்கிறதா என்பது குறித்து தெரியவில்லை. ஆனால், அவர் கண்டிப்பாக இந்த வருட ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று உருதியாகியுள்ளது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கியமான பதிவு பதிவு செய்துள்ளது.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி விசுவநாதன் இதனை கூறியுள்ளார் .அந்த பதிவில் சுரேஷ் ரெய்னா தனது சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பியுள்ளார். இந்த வருட ஐபிஎல் தொடரில் அவரால் விளையாட முடியாது இந்த கடினமான காலகட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவருக்கு முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் தெரிவிக்கும் .அவரது குடும்பத்திற்கும் எங்களது ஆதரவு எப்போதும் உண்டு என்று தெரிவித்துள்ளார்

எப்படி பார்த்தாலும் சுரேஷ் ரெய்னா விற்கு மாற்றாக விரைவில் ஒரு வீரர் வருவார் என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இவர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக நின்று விளையாடியவர் பொறுத்திருந்து பார்ப்போம் எந்த வீரர் சுரேஷ் ரெய்னா வவிற்கு பதிலாக வருகிறார் என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks