truetamilnews.com

முக்கிய நிகழ்வுகள் :-

1949ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர், சையத் கிர்மானி சென்னையில் பிறந்தார்.

1993ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி உலகின் மிகப்பெரிய செப்பினாலான புத்தர் சிலை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது.

பிறந்த நாள் :-

ராஜேஷ் கன்னா

இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா 1942ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜதின் கன்னா.

1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா, 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 15 வெற்றிப் படங்களை தொடர்ந்து தந்து ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்தை பெற்றார்.

இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகினர் இவரை ‘இந்தித் திரையுலகின் சிவாஜி’ என்றனர். ராஜீவ் காந்தி இவரது ரசிகராக இருந்து பின்பு நண்பரானார்.

இவர் மூன்று முறை சிறந்த நடிகருக்காக ஃபிலிம்ஃபேர் விருது பெற்றுள்ளார். மேலும் 2005ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. 1990-களில் சினிமாவை விட்டு விலகி, காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் வென்று மக்களவை உறுப்பினரானார்.

இந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா 69-வது வயதில் (2012) மறைந்தார். இவரின் மறைவுக்குப் பிறகு, பத்ம பூஷண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

குவெம்பு

இந்திய எழுத்தாளர் கே.வி.புட்டப்பா என்று பரவலாக அறியப்படும் குப்பாலி வெங்கடப்பகௌடா புட்டப்பா 1904ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தார்.

20ஆம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். புட்டப்பா தன்னுடைய படைப்புகள் அனைத்தையும் குவெம்பு என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார்.

இவர் இராமாயணக் கதையை நவீன கன்னடத்தில் ஸ்ரீ ராமாயண தரிசனம் என்று எழுதியுள்ளார். கர்நாடக மாநில நாட்டுப்பண்ணான ஜெய பாரத ஜனனீய தனுஜாதே இவர் எழுதியதாகும்.

இவர் பத்ம பூஷண், பத்மவி பூஷண், சாகித்திய அகாடமி விருது, ஞானபீட விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இராஷ்ட்ரகவி என்று பாராட்டப்பட்ட இவர் தன்னுடைய 89வது வயதில் (1994) மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks