truetamilnews.com

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 115.1 ஓவர்களில் 326 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 131 ரன் கூடுதலாகும்.

கேப்டன் ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 112 ரன்னும், ஜடேஜா 57 ரன்னும் எடுத்தனர். பின்னர விளையாடிய ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணிக்கு 70 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அகர்வால் – கில் தொடக்க வீரர்களாக களமிங்கினர்.

அகர்வால் 5 ரன்னிலும், புஜாரா 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எனினும் அடுத்து வந்த கேப்டன் மற்றும் கில் ஜோடி வெற்றியை உறுதி செய்தது. இதன்மூலம் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்மான் கில் 35 ரன்களும், ரஹானே 27 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதனால் இந்த போட்டி 4 ஆம் நாளிலேயே முடிவுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks