truetamilnews.com

தீபக் சாஹரை தொடர்ந்து சென்னை அணியின் மற்றொரு வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் செப்டம்பர் 19ம் தேதி துவங்க உள்ளது.

கொரோனாவின் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை நடத்த முடியாத சூழல் நிலவுவதால் யுனைடெட் அராப் எமிரேட்ஸில் இந்த வருடத்திற்கான தொடர் நடக்க உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் துபாய் சென்றுள்ளனர்.

இந்தநிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் உள்பட மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த பந்துவீச்சாளர் தீபக் சாஹர் என்றும் ஒரு தகவல் இன்று வெளியாகியது.

ஐ.பி.எல் தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து வருவது அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks