truetamilnews.com

டேவிட் ஆட்டன்பரோ பிபிசி யில் பணி புரியும் ஓர் ஆங்கிலேய இயற்கையியலாளர். இவருடைய நிகழ்ச்சிகள் மிகவும் புகழ் பெற்றவை. இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவர் காந்தி திரைப்படத்தை இயக்கிய ரிச்சர்டு ஆட்டன்பரோவின் இளைய சகோதரர் ஆவார்..ஐக்கிய ராச்சியத்தில் டேவிட் ஆட்டன்பரோ பிரிட்டனின் சொத்தாகக் கருதப்படுகிறார்.2002 ஆம் ஆண்டு வாக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்ட 100 தலைசிறந்த பிரித்தானியர்களுள் இவரும் இடம்பெற்றிருந்தார்.

இவரது லென்ஸ் வழியே நமக்குத் தெரிந்த இயற்கை.. 94 வயதிலும் இயற்கைக்காக உழைக்கும் டேவிட் அட்டன்பாரோ

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து இயற்கை காதலனாகவும், உலகில் உள்ள அனைத்து விதமான காடுகளின் வனமகனாகவும் வாழ்ந்து வருகிறார் டேவிட் அட்டன்பாரோ.

நம்மை தாங்கும் இந்த பூமியை நாம் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும், அதிக ஆசை காரணமாக மனித இனம் செய்த தவறுகள் என பல வற்றையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

62 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிளானட் எர்த் என இவர் இயக்கிய டாக்குமென்ட்ரி திரைப்படம் ஒவ்வொரு மனிதனும் காண வேண்டிய பொக்கிஷமாகும். கருப்பு வெள்ளை காலம் தொடங்கி 4K டெக்னாலஜி, 3டி தொழில்நுட்பம் என பல பாஃப்டா விருதுகளை பெற்றார் இந்த மாமேதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks