truetamilnews.com

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் 72-வது மற்றும் 2020-ம் ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. அதில் கோவையைச் சேர்ந்த காயத்ரி எனும் சிறுமியைப் பாராட்டிப் பேசியுள்ளார் நரேந்திர மோதி.

மனிதர்கள் பயன்படுத்தும் சக்கர நாற்காலியை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் கோயம்புத்தூரில் காயத்ரி என்பவர், தன் தந்தையுடன் சேர்த்து நாய்க்காக ஒரு சக்கர நாற்காலியைச் செய்திருக்கிறார். இது நமக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும் போதுதான் இது சாத்தியமாகிறது எனக் கூறி காயத்ரி மற்றும் அவரது தந்தையைப் பாராட்டி இருக்கிறார் மோதி.

கோவை காயத்ரியைப் போலவே, தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசாச்சாரி ஸ்வாமி என்பவரைக் குறித்தும் பேசி இருக்கிறார் மோதி. தமிழ் மற்றும் சம்ஸ்கிருதப் பண்டிதரான இவர், 16 ஆன்மிக புத்தகங்களை எழுதி இருக்கிறார். தன் 92-வது வயதிலும், தன் புத்தகத்தைத் தானே கணிணியில் தட்டச்சு செய்கிறார். அவருடைய நம்பிக்கை மற்றும் ஆர்வம் அவரது இளமைக் காலத்தில் இருந்தது போலவே தொடர்கிறது எனப் பாராட்டியிருக்கிறார் மோதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks