truetamilnews.com

எண்ணெய் பசை சருமத்தினரை பொலிவாக்கும் சில எளிய வழிகள் 

சரும பிரச்சனைகளை அதிகமாக சந்திப்பவர்கள் எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் தான். அவர்கள் முகத்தில் எப்பொழுதும் எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால் முகம் பொலிவிழந்து ஒரு விதமாக கருமையாக காணப்படும். இவர்களது முகத்தை பொலிவாக்கும் சில இயற்கை வழிகளை இங்கு பார்ப்போம்

1.நான்கு டீ ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 டீ ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரில் அல்லது வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்ய வேண்டும். 

2. மூன்று டீ ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டீ ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்

3.இரண்டு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு சாற்றில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டீ ஸ்பூன் தேன் கலந்து இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம்

4.நான்கு டீ ஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு அத்துடன் 1 டீ ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் மிகவும் நல்லது. விரைவில் இது எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். சருமத்தை பொலிவாக்கும். 

5. ஆரஞ்சு பழத்தோலை நன்கு உலர  வைத்து பொடி செய்து அத்துடன் பால் சேர்த்து போஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர்ந்த பிறகு கழுவினால் முகத்தில் உள்ள கருமை படிப்படியாக குறையும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks