truetamilnews.com

 

அப்படி என்ன உணவு காலை மற்றும் இரவில் உண்கிறோம். வேற ஒன்றும் இல்லை இட்லிதான் அந்த உணவு. அனைவரும் காலையில் உண்பார்கள். ஆனால் இரவிற்கு இட்லியை உணவாக எடுப்பவர்கள்  குறைவே. 

அந்த இட்லியின் நன்மைகள் பற்றி அறிவோம்
பொதுவாக ஒருவருடைய உயரம் மற்றும் எடையை பொறுத்துத்தான் உணவையும் அதன் அளவையும் தீர்மானிக்க முடியும். அந்த அடிப்படையில் எல்லோருக்குமான உணவாக இட்லி இருக்கிறது.  அது போல இட்லி எல்லோருக்கும் ஏற்ற உணவாகவும் இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றதாகவும் இருக்கிறது. 

ஒரு இட்லியில் 60 முதல் 70 கிலோ கலோரிகள் அடங்கியுள்ளன. 2 கிராம் புரதம், 8 கிராம் கார்போ ஹைட்ரேட், 2 கிராம் நார்சத்து, ஒரு மில்லி கிராம் இரும்பு சத்து, கால்சியம், பொட்டாசியம்  மற்றும் பொட்டாசியம் ஆகியவை அமைந்துள்ளது. 

தினமும் நான்கு இட்லிகள் எடுத்துக் கொண்டால் 300 முதல் 350 கலோரிகள் நம் உடலுக்கு கிடைக்கும். இட்லியோடு சட்னி சாம்பார் சேரும்போது அனைத்து ஊட்டசத்துகளும் சரிவிகிதத்தில் கிடைக்கும். 
இட்லி நம் உடலில் இரத்ததை உற்ப்த்தி செய்ய உதவுகிறது. உடலுக்கு தேவையான எனர்ஜியை தருகிறது. தசைகளுக்கு பலம் அளிக்கிறது.

மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பையும் அளிக்கிறது. உடலில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் செரிமானம் ஆகும் உணவாகவும் மற்றும் பயண நேரத்தின் போது  உண்பதற்கு ஏற்ற உணவாகவும் இருக்கிறது. 

இட்லியோடு சட்னி மற்றும் சாம்பார் எடுத்துக் கொள்வது சரியாக இருக்கும் மற்றும் அதுவே போதுமானது. இட்லியோடு மீன் குழம்பு, மட்டன் குழம்பு, காரக் குழம்பு என எடுத்துக்கொள்வது தவறு. மற்றும் இட்லியோடு வடை போண்டா எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் 

வாயுக்கோளாறு உள்ளவர்கள் தினமும் இட்லி எடுத்துக் கொள்வது நல்லது. வயிற்றுப் புண்கள் ஆறுவதோடு செரிமான உறுப்புகள் சீராக இயங்க உதவுகிறது. 

இட்லி இரண்டு மணி நேரத்திற்குள் செரிமானமாக கூடிய உணவாகும். இட்லியை குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பது நல்லது. மேலும் அவர்களுக்கு ரவை, ராகி, கேரட் துருவல், பீட்ரூட் துருவல், வெஜிடபிள் போன்றவை கலந்து குழந்தைகள் விரும்பும் வண்ணம் கொடுக்கலாம். 

இட்லியை காலைப் பொழுதில் எடுத்துக் கொள்வது நல்லது. புரதச் சத்து ஒவ்வாமை உள்ளவர்கள் இட்லியில் அரிசிக்கு பதிலாக ஜவ்வரிசி சேர்த்துக் கொள்ளலாம். 

நீரிழிவு நோய் சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் இட்லியை குறைவாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் மருத்துவர் ஆலோசனைப் படி உட்கொள்வது சிறந்தது. 

இட்லி நீராவியில் வேக வைக்கும் உணவு என்பதால் கொழுப்புச்சத்து குறைவாக உள்ள உணவாக இருக்கிறது. 

இட்லி மாவை 12 மணி நேரம் ஊற வைப்பதால் இயற்கையாகவே பல உயிரிச்சத்துகள் உருவாகின்றன. 

இட்லி மாவு 12 மணி நேரம் புளித்த பிறகு பயன்படுத்த வேண்டும். அதிகம் புளிக்கும்படியும் பயன்படுத்த கூடாது.

இட்லியை வீட்டில் செய்து சாப்பிடுவதே சிறந்தது. இட்லி மென்மையாக இருக்க வேண்டும் என்பதால் ஓட்டல்களில் பேக்கிங் சோடா பயன்படுத்துகிறார்கள். அது இட்லியின் பயன்களை குறைப்பதோடு உடலுக்கு தீமைகளை தருகிறது. இட்லி மென்மையாக இருப்பதற்கு பேக்கிங் சோடா சேர்ப்பதற்கு நார்ச்சத்துகள் நிறைந்த வெந்தயம் பயன்படுத்தலாம். இது ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

இட்லியில் நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்கள் இருப்பதால் 12 மணி நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும். இட்லியை பிரிட்ஜில் வைக்கக் கூடிய அவசியமும் இருக்காது. மொத்தத்தில் உடல் ஆரோக்கியத்திற்கும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கும் இட்லி அடித்தளமாக விளங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks