truetamilnews.com

பாரம்பரியமாக பாட்டி கை வைத்தியத்தின் மூலம் உருவான பனை ஓலை கொழுக்கட்டை


தேவையான பொருட்கள்


பச்சரிசி – முக்கால் கிலோ
கருப்பட்டி – அரை கிலோ
ஏலக்காய் – எட்டு
தேங்காய் – துருவியது ஒரு மூடி 
பனை ஓலைகள் – 10

செய்முறை 

பச்சரிசியை ஊர வைத்து களைந்து நிழலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.  கடாயை காய வைத்து துருவிய தேங்காயை அதில் போட்டு ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.  அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள்   ஆகியவற்றை போடவும்.

truetamilnews.com

கருப்பட்டியில் தண்ணீர் சேர்த்து இலம் பாகு பதத்தில் காய்ச்சவும். பின் இறக்கி வடிகட்டி மாவுடன் இட்டு பிசையவும்.  ஓலையை அரை அடி நீளத்திற்கு வெட்டி பிசைந்த மாவை அதன் நடுவில் வைத்து இட்லி தட்டில் வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவு தான்.


சுவையான பனை ஓலை கொழுக்கட்டை தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks