truetamilnews.com

முக்கிய நிகழ்வுகள் :-

1947ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முதல் டிரான்சிஸ்டர், பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. 

1958ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரமான டோக்கியோ கோபுரம் திறக்கப்பட்டது.

1954ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முதல் மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் நடத்தப்பட்டது.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஒன்பதாவது இந்தியப் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மறைந்தார்.

2013ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஏகே47 துப்பாக்கியை வடிவமைத்த மிக்கைல் கலாசுனிக்கோவ் மறைந்தார்.

2014ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தர் மறைந்தார்.

முக்கிய தினம் :-

இந்திய விவசாயிகள் தினம்

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம் விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிசம்பர் 23ஆம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ஆகும். இந்தியாவில் இன்றும் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்திற்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர்.

நினைவு நாள் :-

பி.கக்கன்

விடுதலைப் போராட்ட வீரர், தமிழக முன்னாள் அமைச்சர் பி.கக்கன் (P.Kakkan) 1908ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவர் அரசியல் அமைப்பு சட்டசபை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், பொதுப்பணித்துறை, பழங்குடியினர் நலத்துறை, விவசாயத்துறை அமைச்சர், மாநில உள்துறை அமைச்சர் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

இவர் அமைச்சர் பொறுப்பு வகித்த காலக்கட்டத்தில் அணைகள், இரண்டு விவசாயப் பல்கலைக்கழகங்கள் கட்டப்பட்டன. இவரின் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999ஆம் ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

எளிமையின் சின்னமாகவும், பொது வாழ்வில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த பி.கக்கன் 73வது வயதில் 1981ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி மறைந்தார்.

பிறந்த நாள் :-

சரண் சிங்

இந்திய குடியரசின் முன்னாள் பிரதமர் திரு.சரண் சிங் 1902ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் நூர்பூரில் பிறந்தார்.

சரண் சிங் சுதந்திர இயக்கத்தின் பகுதியாக அரசியலில் நுழைந்தார். சுதந்திரத்திற்கு பிறகு இவர் 1950ஆம் ஆண்டு, ஜவகர்லால் நேருவின் சோசலிச மற்றும் உழடடநஉவiஎளைவ நில பயன்பாடு கொள்கைகளுக்கு எதிரான போரில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

மேலும் இவர் வருவாய், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், நீதி, தகவல், வேளாண்மை ஆகிய பல துறைகளில் பணிபுரிந்துள்ளார். காங்கிரஸ் பிரிந்தபோது, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் 1967ஆம் ஆண்டு முதல்முறையாக உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றார்.

எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த திரு.சௌத்ரி சரண் சிங் தனது ஓய்வு நேரத்தில் ஜமீன்தாரி முறை ஒழிப்பு, கூட்டுறவு பண்ணை முறை, இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும், வேலை செய்பவர்களுக்கு நிலம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

லட்சக்கணக்கான விவசாயிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்கிய சரண்சிங் 1987ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி தனது 84வது வயதில் மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks