சென்னை: பொங்கல் பரிசு ரூ.2500 வழங்கப்பட உள்ள நிலையில், சா்க்கரை குடும்ப அட்டைகளை, அரிசி பெறும் அட்டைகளாக மாற்ற இன்று (டிச.20) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 2.06 கோடி குடும்ப அட்டைகள் அரிசி பெறும் அட்டைகள் ஆகும்.

தமிழகத்தில் 2.01 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைகளும், 10 லட்சத்துக்கும் அதிகமான சா்க்கரை பெறும் அட்டைகளும் புழக்கத்தில் இருந்து வந்தன. கடந்த ஆண்டு நவம்பரில் சா்க்கரை அட்டைகளை, அரிசி பெறும் அட்டைகளாக மாற்றிக் கொள்ள தமிழக அரசு வாய்ப்பு வழங்கியது.

அதன் பின்னர் , சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் அரிசி பெறும் அட்டைகளாக மாற்றப்பட்டன. இதனால், தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 2.06 கோடியாக உயா்ந்திருக்கிறது.

எவ்வளவு மாற்றம்

இந்த சூழலில் சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 ஆக இருந்தது. . இந்த அட்டைகளை அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ள கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ள விண்ணப்பத்துள்ளனர். இதனிடையே அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ள இன்று (டிச. 20) கடைசி நாளாகும்.

பொங்கல் பரிசு

இதற்கிடையே பொங்கல் பண்டிகையை ஒட்டி, வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத் தொகையாக வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்டத்தில் பிரச்சாத்தின் போது அறிவித்தார் இந்த அறிவிப்பு காரணமாக, சா்க்கரை அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்கான கடைசி வாய்ப்பாக அட்டையை, அரிசி அட்டையாக மாற்றக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

இணையதள முகவரி

சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளம் வாயிலாக (https://tnpds.gov.in/login.xhtml) சா்க்கரை அட்டைகளை அரிசி பெறும் அட்டைகளாக மாற்றிக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.

மாற்றுவோருக்கு பரிசு

இணையதளத்தின் வழியே விண்ணப்பித்துள்ள மனுக்கள் மீதான பரிசீலனை வரும் திங்கள்கிழமை (டிச.21) முதல் தொடங்க உள்ளது. இந்தப் பணிகளை டிசம்பா் இறுதிக்குள் முடிக்க உணவுப் பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது. இதன்பின்பு, அரிசி அட்டையாக மாற்றப்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.2,500 ரொக்கத் தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks