truetamilnews.com

 
கேரளாவில் கடந்த 10 ஆம் தேதி பஞ்சாயித்து தேர்தல் நடைபெற்றது. அதில் அந்த மாநிலத்தின்  பெரும் பலத்தை கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியாவின் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரத ஜனதா கட்சி, இந்தியாவின் பழமையான காங்கிரஸ் கட்சி, தமிழகத்தின் அதிமுக கட்சி  மற்றும் சுயேட்சை கட்சிகள் போட்டியிட்டன.

வாக்கு கேட்க வேட்பாளர்கள் 

தேர்தல் நடக்க இருக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொரு ஊராக சென்று வாக்கு சேகரிக்க ஆரம்பித்தனர். 

எங்கு பார்த்தாலும் ஒரே போஸ்டர்

வாக்கு கேட்க வரும் இடங்களில் எல்லாம் கட்சிகளின் போஸ்டர், கட்சி சின்னங்களின் போஸ்டர், வேட்பாளர்களின் முகங்கள் என பார்க்கும் இடம் எல்லாம் போஸ்டர்கள் ஒட்டினார்கள் கட்சியின் அருமை தொண்டர்கள். 

தேர்தலுக்கு முந்தைய நாள்

தேர்கதலுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பு வரை மட்டும்தான் வாக்கு சேகரிக்க ஊருக்குள் வேட்பாளர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் வரவேண்டும். இங்கு சில பகுதிகளில் முந்தைய நாள் இரவு வரை வாக்கு சேகரிக்க வந்தார்கள். 

தேர்தல் நாள் 

டிசம்பர் 10 தேர்தல் நாள் ஆகும். பரபரப்புடன் தேர்தல் நாள் கடந்தது. சில கட்சி தொண்டர்கள் கார் வைத்து உடலுக்கு முடியாதவர்களை கூட அழைத்துக் கொண்டு தங்கள் கட்சிக்கு வாக்கு அளிக்கவேண்டும் என கூறி அழைத்து சென்று வாக்குகளை பெற்றார்கள்

ஆறு நாட்கள் கழிந்து தேர்தல் முடிவு

தேர்தல் நடந்து முடிந்து ஆறு நாட்களுக்கு பிறகு இன்று தேர்தல் முடிவுகள் வெளியிட்டது தேர்தல் ஆணையம். இங்கு மக்களின் எதிர்பார்பை  பொய்யாக்காமல் கேரளாவின் அதிக பலம் படைத்த கம்யூனிஸ்ட் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளது. 

6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம் உள்ளிட்ட 5 மாநகராட்சிகளை இடதுசாரிகள் கைப்பற்றியுள்ளன. திருவனந்தபுரம், கொல்லம், கொச்சின், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மாநகராட்சிகள் இடதுசாரிகள் வசமாகின. கண்ணூர் மாநகராட்சி மட்டும் காங்கிரஸ் வசமானது.

86 நகராட்சிகளில் காங். தலைமையிலான அணி 45-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் இடதுமுன்னணி 35 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இதர கட்சிகள் 4 நகராட்சிகளையும் பாஜக 2 நகராட்சிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

காங்கிரஸ் கட்சி வெற்றி

86 நகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி 45 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. ஆளும் கட்சி 35 இடங்களை கைப்பற்றி வெற்றியை பெற்றுள்ளது

பாஜக கட்சி ஆறுதல் வெற்றி

86 நாகராட்சியில் வெறும் 2 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது இந்த கட்சியின் ஆறுதல் வெற்றி என்று கூறலாம்
மொத்த இடங்களின் எண்ணிக்கை 1199 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி 447 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 362 இடங்களையும் பாஜக கட்சி 31 இடங்களையும் கைபற்றியுள்ளது. 359 இடங்களில் இதர கட்சிகள் வென்றுள்ளது. 

ஊரெங்கும் கொண்டாட்டம்

கம்யூனிஸ்ட் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளதால் கேரளாவில் பல இடங்களில் அந்த கட்சியின் தொண்டர்கள், இளைஞர்கள் என எல்லோரும் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி வெற்றியை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். கட்சிக் கொடிகளை கையில் ஏந்தி ஊர்வலமாகவும் அந்த கட்சியை போற்றியும் வெற்றியை கொண்டாடுகிறார்கள். அதில் ஒரு பகுதியாக நமக்கு இந்த வீடியோ கிடைத்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks