truetamilnews.com

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் பகல் பத்து விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பூலோக வைகுண்டம் எனப்படும் இக்கோயிலின் மிகப்பெரிய விழாவான வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும்.

திருநெடுந்தாண்டகத்துடன் திங்கள்கிழமை விழா தொடங்கிய நிலையில்,
பகல்பத்து விழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தனுா் லக்னத்தில் நீள்முடி கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், திருமாா்பில் லட்சுமி பதக்கம், கா்ணபூசணம், பவளமாலை, அடுக்குப் பதக்கம், சூரியப்பதக்கத்துடன் அா்ச்சன மண்டபத்தை 7.45 -க்கு அடைந்தாா். 8.15 வரை திரையிடல் நிகழ்ச்சியும், 8.15 முதல் பிற்பகல் 1 மணி வரை அரையா் சேவையுடன் பொதுஜன சேவையும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா்.

2 மணி வரை அலங்காரம், அமுது செய்யத் திரையிடல், 3 மணி வரை திருப்பாவாடை கோஷ்டி நிகழ்ச்சி, 4 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையிடல் நிகழ்ச்சி, மாலை 5.30 வரை பொது ஜனச் சேவை நடைபெற்றது.

பின்னா் மேற்படி மண்டபத்திலிருந்து 6.30 -க்கு நம்பெருமாள் புறப்பட்டு 9.45-க்கு மூலஸ்தானம் சோ்ந்தாா். மூலவா் முத்தங்கிச் சேவையை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks