ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்க வேண்டாம் என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யா தயாரித்த ஆயுதங்களை வாங்க வேண்டாம் என இந்தியாவுக்கு அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.

ரஷ்யா தயாரித்துள்ள S400 Triumf ஏவுகணை அமைப்பை துருக்கி வாங்கியுள்ளது. எனவே, துருக்கி மீது டொனால்ட் ட்ரம்ப் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் ஆயுதத்தை வாங்க வேண்டாம் என இந்தியா உள்பட மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

துருக்கி NATO கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அமெரிக்காவின் காட்சா சட்டத்தின் கீழ் துருக்கி ராணுவ கொள்முதல் முகமை மற்றும் அந்நாட்டின் நான்கு அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க சர்வதேச பாதுகாப்பு துறையின் துணை செயலாளர் கிறிஸ்டபர் ஃபோர்ட் பேசியபோது, “ரஷ்ய ஆயுதங்களை கொள்முதல் செய்வதை, முக்கியமாக தடையை சந்திக்கக்கூடிய ஆயுதங்கள் கொள்முதல் செய்வதை மற்ற உலக நாடுகளும் தவிர்க்க வேண்டும்.

இல்லாவிட்டால், மற்ற நாடுகள் மீதும் காட்சா சட்டம் பிரிவு 231 கீழ் சம்பந்தப்பட்ட நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும்” என்று எச்சரித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் ரஷ்யாவின் S-400 ஆயுதங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அமெரிக்காவின் ஆட்சேபனையையும் மீறி இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டன.

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்க வேண்டாம் என இந்தியாவை அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. மேலும், இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் மிரட்டி வருகிறது. ஆனால், அமெரிக்காவும் இந்தியாவுக்கு தொடர்ந்து ஆயுதம் விற்பனை செய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks