truetamilnews.com

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகராக திகழ்பவர். இவருக்கென்று தமிழில் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

truetamilnews.com


சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.

அதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார்.
மேலும் இப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் விரைவில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தல அஜித்தை பொது இடத்தில் பார்ப்பதே கஷ்டம், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்து வந்துள்ளார்.

அப்படி இருக்கையில் ரோட்டு கடை ஒன்றில் சாதாரணமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அப்புகைப்படத்தை பார்க்கையில் அவரின் பைக் ட்ரிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் போல் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks