கோவிட்-19 தடுப்பூசி போட்டால் மது அருந்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மது அருந்துவதையும், புகைப்பிடிப்பதையும் நிறுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

​கோவிட்-19 தடுப்பூசி போட்டி

உலகம் முழுக்க கொரோனா வைரஸை தடுக்க சுமார் 150 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் வெகு சில தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனை வரை வந்துள்ளன. அதிலும் ஒருசில தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையிலும் வெற்றிபெற்றுள்ளன. குறிப்பாக, ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

​மது அருந்த தடை

ரஷ்யா சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் V தடுப்பூசியும் இறுதிகட்ட சோதனையில் வெற்றிபெற்றுள்ளது. எனினும், இந்த தடுப்பூசியை போடுவோர் மது அருந்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிரந்தர தடையா?

தடுப்பூசி போடப்படுவோர் ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு மரு அருந்தக்கூடாது என ரஷ்ய துணை பிரதமர் தத்தியானா கோலிகோவா தெரிவித்துள்ளார். ஸ்புட்னிக் தடுப்பூசியின் திறன் வெளிப்படுவதற்கு 42 நாட்கள் ஆகும் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

​மற்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்

தடுப்பூசி போட்டுக்கொண்டபிறகும் மக்கள் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், மாஸ்க் அணிதல், சானடைசர் பயன்படுத்துதல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டுமென துணை பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், மது அருந்துதல், நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளை (immuno suppressant drugs) எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

​ஏன் மது அருந்தக் கூடாது?

ரஷ்யாவின் நுகர்வோர் பாதுகாப்பு துறை தலைவரான அன்னா பொபோவா பேசியபோது, “தடுப்பூசி போடுவதற்கு முன் இரண்டு வாரங்களுக்காவது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். மது அருந்தினால் உடலுக்கு சிரமம் ஏற்படும். ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றாலும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமென்றாலும் மதுவை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

​புகை பிடிக்கலாமா?

தடுப்பூசி போடுவதற்கு முன்பும், போட்ட பிறகும் புகைப் பிடிப்பதை தவிர்க்க வேண்டுமென அன்னா பொபோவா அறிவுறுத்தியுள்ளார். புகையால் நுரையீரல் எரிச்சலடையும் எனவும், நோயெதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks